160 நாள் ஒர்க் அவுட்டில் உடற்கட்டை இரும்பாக்கிய சீனியர் நடிகர்..
மம்மூட்டிக்கு வயது 68. காலையில் தினமும் சட்டை வேட்டி அணிந்து பெரிய மனித தோரணையில் வீட்டை விட்டுக் கிளம்பும் மம்மூட்டி வீட்டுக்கு வெளியில் தன்னை காணக் காத்திருக்கும் ரசிகர்களை சந்தித்துப் பேசிவிட்டு காரில் ஏறி ஷுட்டிங் செல்வார். இதெல்லாம் 160 நாட்களுக்கு முன்பு நடந்தது என்றைக்கு லாக் டவுன் அறிவித்தார்களோ அன்றைக்கு வீட்டுக்குள் சென்றவர் வெளியில் தலைகாட்டவில்லை.சுமார் 160 நாட்களாக ஒரு சபதம் செய்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார் மம்மூட்டி. தன்னால் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே எவ்வளவு நாள் இருக்கமுடியும் என்பதை கணக்குப் பார்ப்பது தான் அந்த சபதம்.
வீட்டில் அப்படி என்ன செய்கிறார் மம்மூட்டி. அவரே செல்ஃபி படம் எடுத்து மெசேஜும் பகிர்ந்திருக்கிறார். வீட்டில் வேலை, வீட்டிலிருந்து வேலை, வீட்டு வேலை, வேறு எந்த வேலையும் இல்லை அதனால் ஒர்க் அவுட் செய்வது தான் வேலை என வார்த்தையில் விளையாடி இருக்கிறார். தனது வீட்டுப் பணிகள் பற்றித் தெரிவித்திருக்கிறார். 160 நாட்களாக ஒர்க் அவுட் செய்ததில் உடலை இரும்பு போல் கட்டுமஸ்தாக்கி இருக்கும் மம்மூட்டி அந்த தோற்றத்தையும் நாசுக்காகக் காட்டி இருக்கிறார். இது 68 வயதுக்கான தோற்றம் இல்லை 28 வயதுக்கான தோற்றம் என்று மம்மூட்டி தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். மம்மூட்டி நடிப்பில் கடைசியாக அஜய் வாசுதேவ் இயக்கத்தில் ஷைலாக் வந்தது. அடுத்து சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் பிலால் 2 கொரோனா லாக் டவுனால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.