பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி: உஷா வயிற்றில் சிசு இல்லை
திருச்சியில், போக்குவரத்து ஆய்வாளரால் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி இல்லை என்பது பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
திருச்சியில் கடந்த 7ம் தேதி காவல் ஆய்வாளர் காமராஜ் உள்பட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியால் உஷாவும் அவரது கணவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தனர்.
காவல் ஆய்வாளர் காமராஜ் அந்த பைக்கை நிறுத்த முற்பட்டார். ஆனால், பைக்கை நிறுத்தாமல் உஷாவின் கணவர் சென்றதால், பின்தொடர்ந்த காமராஜ் பைக்கை எட்டி உதைத்தார். இதில், நிலைத்தடுமாறிய உஷாவும் அவரது கணவரும் கீழே விழுந்தனர். அப்போது, பின் பக்கத்தில் இருந்து வந்த வேன் ஒன்று உஷா மீது பயங்கரமாக மோதியது. இதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் தப்பிய உஷாவின் கணவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது, உஷா கர்ப்பமாக இருந்ததாகவும், காவல் ஆய்வாளர் காமராஜ் இரண்டு உயிரையும் பறித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், காமராஜை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கை தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உஷா வயிற்றில் கரு இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த திடுக் தகவல் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com