அபாய கட்டத்தை தாண்டிவிட்ட எஸ்பிபி சீக்கிரம் வருவார்.. ரஜினிகாந்த் வீடியோ பேச்சு..
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார். சீக்கிரம் திருப்பி வருவார் என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டரில் ரஜினி காந்த் இன்று வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி, கோடி கோடி மக்களை மகிழ்வித்த மதிப்புக்குரிய எஸ்.பி.பி அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Get well soon dear Balu sir pic.twitter.com/6Gxmo0tVgS
— Rajinikanth (@rajinikanth) August 17, 2020