நடிகர் கருணாஸ் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தார்.. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்..
திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருப்பவர் நடிகர் கருணாஸ். இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.சென்ற வாரம் இவர் தனது சொந்த ஊரில் தங்கியிருந்த போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். வீட்டிலேலே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தவர் ஓரிரு நாட்களில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
தனது உடல் நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து வீடியோவில் பேசி வெளியிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் கடினமான பணியை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர் என்று தெரிவித்தார். சிகிச்சையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார். வீட்டிற்குச் செல்லாமல் தனிமையில் ஒரு இடத்தில் அவர் மேலும் 10 நாட்கள் தங்கி இருக்க டாக்டர்கள் கூறியிருப்பதாகத் தெரிவித்தார் கருணாஸ்.