எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி மகன் சரண் அறிக்கை..
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எஸ்.பி.பி விரைவில் குணம் அடைந்து வரவேண்டும் என்று இளையராஜா, ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன். ரஜினிகாந்த், குஷ்பு, அனிருத் என திரையுலகினர் பலரும் விருப்பம் தெரிவித்தும், பிரார்த்தனை செய்வதாகவும் மெசேஜ் வெளியிட்டனர். அவர் உடல்நிலை தேறி வருவதாக நேற்று எஸ்பிபி மகன் சரண் தெரிவித்தார். எஸ் பி பி சரண் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை எஸ். பி. பி. உடல்நிலை சீராக உள்ளது. எனது தந்தை எஸ்.பி.பி.க்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.