ஜீவி பிரகாஷ் ஜோடி நடிகையின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..
நடிகர், நடிகைகள் மட்டுமல்ல சில சமயம் அரசுத் துறைகளின் இணையதள டிவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் முடக்குக்கின்றனர். அதில் ஏடாகூடமாகத் தகவல் வெளியான பிறகுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷயம் தெரியவருகிறது. சில மாதங்களுக்கு முன், சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று புட்ட பொம்மா பாடல் புகழ் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் மெசேஜ் வெளியானது. அதற்கு சமந்தா ரசிகர்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்ததுடன் சமந்தாவிடம் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால் பூஜா, தனது இணைய தள கணக்கை ஹேக் செய்து இதுபோல் யாரோ பதிவிட்டிருக்கிறார்கள் என்றார்.
முன்னதாக அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவுட்லா போன்றவர்களின் கணக்கு முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. தற்போது தமிழ் நடிகை ஒருவரின் இணைய தள கணக்கு முடக்கப்பட்டிருகிறது.நடிகை இஷா ரெப்பா. இவர் ஓய்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து ஜீவி பிரகாஷுடன் 'ஆயிரம் ஜென்மங்கள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இஷா தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு இளசுகளை வளைக்கும் வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இஷா ரெப்பாவின் டிவிட்டர் கணக்கை யாரோ மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை இஷா ரெப்பா தெரிவித்திருக்கிறார்.