பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று மதியம் கிடைக்கும்...

பிளஸ் 2 மறுகூட்டலுக்காக விடைத்தாள் நகல் கோரிய மாணவ, மாணவியர் இன்று மாலை 3 மணிக்கு அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாயின. இதில் மதிப்பெண் குறைந்து விட்ட பல மாணவ, மாணவிகளுக்கு தங்கள் விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. அந்த மாணவ,மாணவியர் தங்கள் விடைத்தாள் நகலை பெற்று, அதில் சந்தேகம் ஏற்பட்டால் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கூறியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு தேர்வு துறை இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:பிளஸ்-2 பொதுத்தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ்-1 மறு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று(ஆக.18) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, Notification என்று இடத்திற்குள் நுழைந்து, தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வதாக இருந்தால், அந்த இணையதள முகவரியில் Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து, வரும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் ஏற்கனவே பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்த போது, மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்திருப்பார்கள். ஒரு வேளை மறுகூட்டலில் அதிக மதிப்பெண் பெற்றால், அது ஒரிஜனல் மார்க்‌ஷீட் இடம் பெறும். அதனால், மாணவர் சேர்க்கையில் அந்த மாணவருக்கு தரவரிசயைில் பாதிப்பு எதுவும் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>