பாடகர் எஸ்.பி.பி குணமடைய புதுவை முதல்வர் பிரார்த்தனை.. ரசிகனோடு ரசிகனாக வேண்டுதல்
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுவதாக நேற்று ரஜினிகாந்த் வீடியோவில் தெரிவித்தார்.மேலும் கமல்ஹாசன், சிவகுமார், இளையராஜா, வைரமுத்து, ஏ ஆர் ரஹ்மான், அனிருத், குஷ்பூ போன்ற பல நட்சத்திரங்கள் எஸ் பி பி குணம் அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று, புதுச்சேரி முதலமைச்சர் என். நாராயணசாமி, பாடகர் எஸ்பிபி குணம் அடைய வாழ்த்துக் கூறி உள்ளார். அதில், 'பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி உலகம் முழுவதும் பிரார்த்திக்கும் பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒரு ரசிகனாக இணைந்து நீங்கள் விரைந்து குணம் அடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.