சோனு சூட் வழியில் பிரபல நடிகை கொரோனா உதவியில் குதித்தார்.. 2 கிராமங்களை தத்தெடுத்தார்..
நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்து தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியும் வெளிநாட்டில் தவித்த மருத்துவ மாணவர் களை விமானத்தில் அழைத்தும் வந்தார். தற்போது நடிகை ஒருவர் கொரோனா பாதிப்பு உதவி செய்யக் களம் இறங்கி உள்ளார். இவர் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் பாடல் காட்சியில் நடித்தார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் வேறுயாருமல்ல பிரபல நடிகை ஜாக்கு லின் பெர்னாண் டஸ். இலங்கையைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள பதார்தி, சக்கூர் ஆகிய 2 கிராமங்களை அவர் தத்தெடுத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, உலகமெங்கும் கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மக்கள் கடினமான நிலையில் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2 கிராமங்களைத் தத்தெடுத்து உள்ளேன் என்றார்.