ஐசிசி அமைப்பு மீது சீறும் தென்னாப்பிரிக்க கேப்டன் டூ ப்ளஸ்ஸி!

ஐசிசி அமைப்பின் விதிமுறைகளில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டூ ப்ளஸ்ஸி.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

அதே நேரத்தில், இரு அணி வீரர்களுக்கு மத்தியில் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இது தொடர்வதால், ஐசிசி, ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆகிய இருவருக்கும் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இதனால் டூப்ளிசஸ் ஏக கடுப்பில் இருக்கிறார்.

இதைப் படித்தீர்களா? : குடிபோதையில் மாணவர்களுடன் தகராறு - கிரிக்கெட் வீரருக்கு சிறை!

இந்த சம்பவம் குறித்து பேசிய டூ ப்ளஸ்ஸி, `இதைப் போன்ற விஷயங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நடப்பது சாதாரணம் தான். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனால், ஐசிசி அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. அதே நேரத்தில் வார்னருக்குக் கொடுத்த தண்டனையிலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது’ என்று ஐசிசி அமைப்புக்கு எதிராக சீறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>