புராண கதை தழுவிய 3டி ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் பாகுபலி ஹீரோ.. பிரபல இயக்குனர் டைரக்ஷன்..
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் இரு வேடங்களில் நடித்தார் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து பிரபாஸிடம் மற்றொரு பாகுபலியை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவர் முற்றிலும் கமர்ஷியல் ரீதியான சாஹோ படத்தில் நடித்தார். இதில் ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்தார். அப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் ராதே கிருஷ்ண குமார் இயக்கத்தில் ராதே ஷியாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
பாகுபலி போன்ற பிரமாண்டத்தைத் தருவதற்காக பிரபாஸ் காத்திருந்தார். அதற்கான நேரம் வந்திருக்கிறது. அப்படத்துக்கு ஆதிபுருஷ் என பெயரிடப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என் 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இதன் சிறப்பம்சம் இப்படம் 3டி யில் தயாராகிறது. ராமாயணத்தைத் தழுவி ஆக்ஷன் கதையாக இதன் ஸ்கிரிபட் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே பிரமாண்டத்துக்குக் குறைவிருக்காது. பல இந்தி, மராத்தியப் படங்களை இயக்கிய ஓம் ரவுட் இதனை இயக்குகிறார். ஏற்கனவே இவர் இந்தியில் சிட்டி ஆப் காட், ஹான்டட் (3டி) போன்ற படங்கள் இயக்கி உள்ளார்.
ஆதிபுருஷ் படத்தில் நடிப்பது பற்றி இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் அறிவித்தார். அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபாஸே வெளியிட்டிருக்கிறார். ஏ என்ற பெரிய எழுத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் அடங்கி இருப்பதுபோல் போஸ்டர் டிசைன் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்கிறார்.