அஜீத்தை அடுத்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறும் உலகநாயகன்..
சினிமாவில் வயதான கெட்டப்பில் நடித்தாலும் நேரில் ஒரு தலைமுடி, மீசை முடி கூட வெள்ளையாக இல்லாதபடி இளமை தோற்றதில் தான் கமல் தனது இமேஜை பராமரித்து வந்தார். ஆனால் படத்திலும் பெப்பர் அண்ட் சால்ட் நிஜத்திலும் அதே தோற்றத்தில் வெளியில் வருகிறார் அஜீத்குமார். அடுத்து வலிமை படத்தில் பிளாக் ஹேர் கெட்டப் மற்றும் பெப்பர் சால்ட் தோற்றதிலும் அஜீத் நடிக்கிறார்.
அடுத்த உலகநாயகன் கமல்ஹாசன் 80 வயது இந்தியன் தாத்தாவாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். விரைவில் பிக்பாஸ் ஷோவின் 4வது எபிசோட் தொடங்க உள்ளார் கமல். அதில் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலான பெப்பர் சால்ட் தோற்றத்தில் பங்கேற்று நடத்தவிருக்கிறார். இதில் பங்கேற்கும் நடிகர், நடிகை தேர்வு தொடங்கிவிட்டது. நடிகர் இர்பான், அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் போன்றவர்களுடன் தற்போது யூடியூப் பிரபலம் ஒருவர் பங்கேற்க உள்ளாராம். நடிகை வனிதாவிடம் அவரது திருமண விவகாரத்தில் தலையிட்டு மோதல் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கைதாகி பின்னர் ஜாமீனில் வந்த சூரியா தேவி பிக்பாஸ்4 ஷோவில் பங்கேற்க உள்ளாராம். அப்படியென்றால் 100 நாட்களுக்குச் சண்டை சச்சரவுக்குப் பஞ்சமிருக்காது என்கிறார்கள் ரசிகர்கள்.