பெண் மேனேஜரிடம் வாட்ஸ் அப்பில் சுஷாந்த் பேசியது சர்ச்சையாகிறது..
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரத்தில் திருப்பங்கள் நடந்து வருகிறது. சுஷாந்த் தற்கொலைக்கு அவரது காதலி, நடிகை ரியா சக்ரபோர்த்தி காரணம். சுஷாந்த் கணக்கிலிருந்து 15 கோடி மோசடி நடந்துள்ளது அது குறித்தும், சுஷாந்தை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்னா போலீல் சுஷாந்த் தந்தை புகார் அளித்தார். இது சுப்ரீம் கோர்ட் வரை சென்று தற்போது வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரிடம் மேனேஜராக பணியாற்றிய திஷா என்பவர், தான் வசித்த குடியிருப்பின் 12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தால் இரு சம்பவங்களையும் சம்பந்தப்படுத்திப் பேசப்பட்டது. தற்போது சுஷாந்த்திடம் திஷா வாட்ஸ் அப்பில் பேசிய விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அது பெரும்பாலும் விளம்பர படங்களில் சுஷாந்த் நடிப்பது பற்றியும் அதற்கான சம்பள விவாகாரம் குறித்த பேச்சாக உள்ளது.
சுஷாந்த் மரணத்துடன் திஷா மரணமும் ஒப்பிட்டுப் பேசப்பட்ட நிலையில் சுஷாந்த் வழக்கறிஞர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், திஷா என்பவரை நான் சந்தித்ததில்லை அவரிடம் எந்த உரையாடலும் வாட்ஸ் அப்பிலும் நடத்தியது இல்லை. திஷா மரணத்தின்போது சுஷாந்த் பெயரும் இழுக்கப்பட்ட போது தான் அந்த பெண்ணின் பெயரை அறிந்துக்கொண்டேன் என்றார்.சுஷாந்த், திஷா தொடர்பு பற்றி பேச்சு எழுந்திருப்பதால் இன்னும் அவர்களின் உரையாடல் எப்படி நடந்திருக்கிறது என்பதை விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.