100 நகரங்களுக்கு மாசுக்கட்டுப்பாடுத் திட்டம்: மூன்றாண்டுகளில் சுத்தமாக்குமாம் மத்திய அரசு!

இந்தியாவில் உள்ள 100 முக்கிய நகரங்களில் மாசுக்கட்டுப்பாடுகள் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காற்று மாசுபாடால் அதிகளவில் இந்திய நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீப காலமாக வரும் ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும் அதிர்ச்சியவே ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் காற்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் இந்தியாவின் 100 முக்கிய நகரங்களுக்கு புதியத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக 100 நகரங்களிலும் மூன்று ஆண்டுகளில் 35 சதவிகித மாசுபாடு குறைக்கப்படுமாம். பின்னர் ஐந்தாண்டு காலத்தில் 50 சதவிகித மாசுபாடு குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பூனே, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தேர்வுப் பட்டியலில் உள்ளன. இந்த நகரங்களில் காற்று மாசுபாடுக்கு வழிவகுக்கும் அனைத்து தொழிற்சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>