உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க ஓடணும் நகைச்சுவை நடிகரின் உருக்கமான வேண்டுதல்..
நகைச்சுவை நடிகர் சூரி, பின்னணி பாடகர் எஸ்பிபி குணம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வர வேண்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்க குரல் கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும் என உருக்கமாகக் கூறி உள்ளார்.சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சார்.. விவரம் தெரிஞ்சு...உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லவிடியக்கால நடந்தாலும் சரி,வீட்ல விசேஷம்னாலும் சரி,தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி,தன்னம்பிக்கையா தட்டிக்கொடுத்து ஓட வைக்கிறதும் சரி,எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்பவந்து எங்களுக்காக பாடணும் - உங்க குரலகேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க ஓடணும்ன்னு...ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்.
இவ்வாறு நடிகர் சூரி கூறி உள்ளார்.