பாண்டே, தினேஷ் கார்த்திக் அதிரடியில் இலங்கையை எளிதாக வீழ்த்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாண்டே, தினேஷ் கார்த்திக் அதிரடியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை, இந்திய அணிகள் பங்கேற்ற 4ஆவது லீக் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மழைக் குறுக்கீடு காரணமாக ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

குணதிலகா 17 ரன்களும், குஷல் பெரேரா 3 ரன்களும் எடுத்து வெளியேறினார். ஆனால், தொடக்க ஆட்டக்காரர் குஷல் மெண்டிஸ் 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இலங்கை 10 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. இதனால், அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதைப் படித்தீர்களா? : ஐசிசி அமைப்பு மீது சீறும் தென்னாப்பிரிக்க கேப்டன் டூ ப்ளஸ்ஸி!

ஆனால், ஷர்துல் தாக்கூர் அற்புதமாக பந்துவீசி இலங்கை அணியை சீர்குலைத்தார். மெண்டிஸ் ஆட்டமிழந்த பிறகு இலங்கை அணியில் எவரும் நிலைத்து ஆடவில்லை. தரங்கா மட்டும் 22 ரன்கள் எடுத்தார். மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினர். கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களிலும், ஷிகர் தவான் 8 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 27 ரன்களிலும், கே.எல்.ராகுல் 18 ரன்களிலும் வெளியேற 85 ரன்களுக்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், ஆட்டம் இலங்கை அணி சாதகமாக இருந்தது.

அதன்பின் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்காமல், அதே சமயம் நிதானமாகவும் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மணிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

17. ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தப் போட்டியில் வங்கதேசத்துடன் மோதவுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>