நடிகை குஷ்பூவுக்கு திடீர் ஆப்ரேஷன்..

நடிகை குஷ்பூ தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். ரஜினியுடன் அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு பாடகர் எஸ்பி. பி குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டிருந்தார் குஷ்பூ.

அதில்,எஸ்பிபி சார் எனக்குக் கடவுள் மாதிரி அவர் விரைவில் குணம் ஆகித் திரும்பி வரவேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஒரு கண்ணில் கட்டு போட்டுக் கொண்டிருக்கும் படத்தை இணைய தள பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.அதுபற்றி தெரிவித்த குஷ்பூ,என் கணவரை நான் அதிகம் சைட் அடித்தேனா, இல்லேன்னா வேறு யாராவது என்னை சைட் அடித்தார்களா என்று தெரிய வில்லை. எனக்கு இப்படி ஆயிருச்சு.. கண்ணில் லேசான அறுவை சிகிச்சை செய்துள்ளேன் சில நாட்களில் சரியாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

More News >>