மூணாறில் மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு
நிலச்சரிவு ஏற்பட்ட மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்தது. இன்று புதிதாக ரேடார் கருவி மூலம் உடல்களைத் தேடும் பணி நடந்தது. இந்த தேடுதல் வேட்டையில் இன்று கண்ணன் என்பவரது மகன் 8 வயதான விஷ்ணு என்ற சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து இதுவரை நிலச்சரிவில் சிக்கிப் பலியானோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 8 பேரின் உடல்களைத் தேடும் பணி நாளையும் தொடரும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.