காந்தி ஹாஸ்பிடல் டாக்டர்கள் கன்ஃபார்ம் செய்து விட்டனர்.. சந்திரசேகர ராவுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்
தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜு என்ற இளைஞர் சவுதியில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, சமீபத்தில் சொந்த ஊருக்கு வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்தவர், காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.அவரின் கைது சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பானது. ஏன் கைது செய்யப்பட்டார் என்பது பற்றி வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதியிலிருந்த ராஜு, கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பற்றி வலைத்தளங்களில் ஒரு குறிப்பு பதிவிட்டார். அதில், முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஐதராபாத் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ளனர்." என்று பதிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து முதல்வரின் உடல்நலம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக ராஜு மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்த நிலையில், ராஜு ஊருக்குத் திரும்பும் தகவல் அறிந்து அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.