விஜய், சூர்யா பற்றி சர்ச்சை கருத்து: நடிகை உருவ பொம்மை எரிப்பு..
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் போதை ஏறி புத்தி மாறி, 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன், இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். நடிகர் விஜய், சூர்யா பற்றிக் கடந்த வாரங்களில் சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டார். அதற்கு ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது விவகாரமான பேச்சை நிறுத்தவில்லை. ஒருபடி மேலே சென்று எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு விஜய்,சூர்யா தான் காரணம் என்றார் .
மீரா மிதுனின் இந்த பேச்சுக்களை அறிந்து இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். சினிமா துறையில் இருந்தாலும் கண்ணியத்துடன் வாழ்க்கை நடத்துவதுடன் கல்வி உள்ளிட்ட உதவிகள் செய்து வரும் விஜய், சூர்யா பற்றிப் பேசுவதை மீரா மிதுன் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அதேபோல் பல ஊர்களில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்து கலாம் இயக்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சூர்யா, விஜய்யின் குடும்பத்தினரைப் பற்றித் தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட மீரா இதனை கண்டித்து கலாம் சேவை மையம் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.புகாரைப் பற்றி மீரா மிதுன் கேலி செய்து பதிவு செய்ததாக, அவரது உருவ பொம்மைகளை எரித்து புதுச்சேரி கலாம் இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.