பேய் படத்துக்கு நயன்தாரா பெயரை வைத்ததால் காதல் இயக்குனர் கோபம்..
நடிகை நயன்தாரா நடித்த படம் நானும் ரவுடி தான். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். இதில் பணியாற்றியபோது தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இந்நிலையில் புதுமுக இயக்குனர் அருள், தான் இயக்கும் பேய் படத்துக்கு காதம்பரி என டைட்டில் வைத்தார். இது விக்னேஷ் சிவனை கோபப்படுத்தியது. காதம்பரிக்கும் விக்னேஷ் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். சம்பந்தம் இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயர் தான் காதம்பரி.
நயன்தாரா பாத்திரத்தின் பெயரைத் தான் தனது பேய் படத்துக்கு டைட்டிலாக வைத்திருப்பதாக இயக்குனர் அருள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பின்னர் இப்படத்தின் டிரெய்லரை வெளியிடும் படி விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது அவர் வெளியிட மறுத்து விட்டாராம். நானும் ரவுடி தான் படத்தில் காது கேட்காத மாற்றுத் திறனாளி காதம்பரியாக அருமையான நடிப்பை வெளியிட்டிருந்தார் நயன்தாரா.
அந்த பாத்திர பெயரைப் பேய் படத்துக்கு வைப்பதா என்ற கோபத்தில் தான் காதம்பரி பட போஸ்டரை வெளியிட விக்னேஷ் சிவன் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் அடுத்து நயன்தாரா, சமந்தா ஆகியோருடன் விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இயக்க உள்ளார். கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.