விஜய் சேதுபதி படம் 2ம் பாகம் உருவாக்க திட்டம்? தயாரிப்பாளர் ரெடி, இயக்குனர் என்ன சொல்கிறார்..
நடிகர் விஜய் சேதுபதி நடித்த படம் தர்மதுரை. விஜய் சேதுபதியின் தாயாக ராதிகா நடித்தார், கதாநாயகிகளாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே நடித்தனர். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. சீனுராமசாமி இயக்கத்தில் வித்தியாசமான அதாவது லிவிங் டுகெதர் பாணியில் இப்படம் உருவானது. அத்துடன் அண்ணன் தம்பி மோதல், காதல் எனப் பல சென்டிமென்ட்டுடன் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தர்மதுரை படம் வெளியாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தில் ராதிகா, விஜய் சேதுபதி போன்றவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை சீனு ராமசாமி தனது இணைய தள வலைப் பக்கத்தில் சொல்லி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். அதைக்கண்டு ராதிகா உள்ளிட்ட படத்தில் பணியாற்றியவர்கள் சீனுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடித்த வரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், தர்மதுரை 2 தயாரிக்கலாமா? நான் ரெடி என இயக்குனரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சீனு பதில் எதுவும் சொல்லா விட்டாலும் எல்லாம் பொருந்தி வந்தால் தர்மதுரை 2 உருவாகும் எனக் கூறப்படுகிறது.