கொரோனா நெகட்டிவ்.. நாளை `பிளைட்!.. துபாய் புறப்பட ஆயுத்தமான சிஎஸ்கே
சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் களம் காண்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் நாளை தோனி, ரெய்னா உட்பட அவரது சகாக்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர். முன்னதாக துபாய் புறப்படுவதற்கு முன்னதாக சென்னை அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் தோனி உட்பட அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
இதுதொடர்பாக ஊடகங்களுக்குப் பேசியுள்ள தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, ``கடைசியாகச் செவ்வாய்க்கிழமை வீரர்களுக்கு இரண்டாம் முறையாக பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. இதில் தோனிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தோனிக்கு மட்டுமல்ல துபாய்க்கு செல்லும் 60 பேருக்கும் கொரோனா இல்லை. சென்னை வீரர்கள் நாளை மதியம் துபாய் செல்கின்றனர். வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 60 பேர் அந்த விமானத்தில் செல்ல இருக்கிறார்கள். அந்த விமானம் நேரடியாகத் துபாய் செல்கிறது. இன்று இறுதி நாளாக அவர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி செய்ய இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே, துபாய் சென்ற பிறகும் அவர்களுக்கு கொரோனா சோதனை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.