எஸ்பிபியை மீட்டெடுப்போம், கூட்டு பிரார்த்தனைக்கு ரஜினி அழைப்பு.. மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை..

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து வந்த நிலையில் கூடுதலாக எக்மோ சிகிச்சையும் அளிக்கப்படுவதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

எஸ்பிபி குணம் அடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்ய பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று ரசிகர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்க இளையராஜா, சத்யராஜ், சிம்பு, கார்த்தி, பெப்ஸி ஆர்.கே.செல்வமணி , கேஎஸ் ரவிக்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி காந்த் வெளியிட்டுள்ள மெசேஜில், பாடும் நிலா, எழுந்து வா. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.. எஸ்பிபியை மீட்டெடுப்போம். 20.08.20 இன்று மாலை 6 மணிமுதல் 6.05வரை எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>