எஸ்பிபி குணம் அடைய தாணு, சிவா, பிறைசூடன் பிரார்த்தனை..
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் பாதித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவர் விரைந்து குணம் அடைந்து வர வேண்டும் எனப் படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா மற்றும் பாடலாசிரியர் பிறைசூடன் பிரார்த்தனை செய்துள்ளனர். பட அதிபர் கலைப்புலி தாணு : இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா!
பட அதிபர் டி சிவா: மனிதருள் மாணிக்கம் என்று போற்றப்படும் வெகு சிலரில் ஒருவர் எஸ்பிபி பிறந்தால் எஸ்பிபியாக பிறக்க வேண்டும் என்று கோடிக் கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் எல்லாம் வல்ல ஈசன் அருளால் நலம் பெற்று மீண்டும் வர வேண்டும்.
கவிஞர் பிறைசூடன்: இசையால், உலகையாண்ட இனிய நண்பரே இனியும் உனது இசைதேவை இந்த உலகம் தேடுகிறது. இறைவனிடம் மனம் மொழி, மெய்களால் நீ பாடிய பாடல்கள் அத்தனையும் உன்னை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கட்டும். ரசிகனாகத் தொண்டனாகப் பாடலாசிரியனாக இறையருளை வேண்டும் குருவருளையும் திருவருளையும் இறைஞ்சும்...
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.