நடிகரின் பெண் குழந்தைக்கு ஜப்பான் பாணி பெயர்..

மாசிலாமணி, பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நகுல். இவர் தனது காதலி ஸ்ருதியை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தனது மனைவி ஸ்ருதி கர்ப்பமான தகவலை சில மாதங்களுக்கு முன் நகுல் இணையதளத்தில் தெரிவித்ததுடன் பின்னர் வளைகாப்பு படத்தையும் பகிர்ந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் ஸ்ருதி நகுலுக்கு பெண் குழந்தை பிறந்தது .

இது குறித்து தகவல் தெரிவித்த நகுல், எனது அழகான குடும்பத்திற்கு அழகு சேர்க்கும் விதமான ஒரு குல்பி புதிய உறுப்பினர் இணைந்திருக்கிறார்என்றார்.இந்நிலையில் குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டு விழா குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கச் சிறிய விழாவாக நடந்தது. குழந்தைக்கு அகிரா என பெயரிடப்பட்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெவித்தார். அத்துடன் பின்னணியில் பிரகாசமான ஒளியுடன் அகிரா என்ற பெயர் தெரிவது போன்ற டிசைனும் வெளியிட்டார். அகிரா என்பது ஜப்பான் மொழியில் வெளிச்சம் என்று அர்த்தமாகும்.

More News >>