விளக்கேற்றி வைத்து ஒருமனதுடன் இசைஞானி பிரார்த்தனை.. நலம் வாழ என்நாளும் என் வாழ்த்துக்கள்..

பாடகர் எஸ்பிபியும், இசைஞானி இளையராஜாவும் மிக நெருங்கிய நண்பர்கள். இளையராஜாவின் அன்னக்கிளி படத்திற்கு முன்பிருந்தே மேடை கச்சேகரிகளில் இணைந்து இருவரும் பணியாற்றி உள்ளனர். அந்தளவுக்கு நெருக்கமான நட்பு இருந்தபோதும் சில வருடங்களுக்கு முன் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டது. தன்னுடைய பாடலை தனக்கு ராயல்டி தராமல் எஸ்பிபி பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. அந்த மனஸ்தாபமெல்லாம் தற்போது எஸ்பி பி உடல் இல்லாமல் இருக்கும் நிலையில் காணாமல் போய்விட்டது.

உனக்கும் எனக்கும் எப்போதும் நட்பு உண்டு, உன்னுடன் சண்டையென்றாலும் அதுவும் நட்பே.. பாலு சீக்கிரம் வா என உரிமையோடு பிரார்த்தனையை வைத்தார் இளையராஜா. கூட்டுப்பிரார்த்தனை பற்றி அறிவித்த இளையராஜா. எஸ்பிபி பாடிய நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்.. என்ற பாடலையும் அறிவிப்புடன் இணைத்திருந்தார். அந்த பாடல் கூட்டுப் பிரார்த்தனையில் முக்கிய பாடலாக இடம் பெற்றது.திரையுலகினர் அனைவரும் எஸ்பி பி மீண்டு வர நேற்று மாலை 6 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே இந்த ஆன்லைன் பிரார்த்தனையில் பங்கேற்றனர். இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட நேரத்தில் அகல்விளக்கு ஏற்றி வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

More News >>