சுவையான இனிப்பு மோதகம் செய்யலாம் வாங்க..
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பிள்ளையாருக்குப் பிடித்த இனிப்பு மோதகம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
நெய்
உப்பு
செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப் பருப்பை தண்ணீரில் அலசி வடிகட்டி துணியில் பரப்பி உலர வைக்கவும்.
பின், மிக்ஸியில் ரவை பதத்தில் அரைக்கவும்.
இதனை வெறும் வானலியில் மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அகண்ட வானலியில் மூன்று கப் அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் வறுத்து வைத்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி வேகவிடவும்.அரிசியும், பருப்பும் நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்து கரையும் வரை கிளறவும்.
அத்துடன், ஏலக்காய்த் தூள், தேங்காய்த் துருவல், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
கையில் நெய் தடவி கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
அட்டகாசமான சுவையில் இனிப்பு மோதகம் தயார்!