வறண்ட சருமத்திற்கு இரண்டு சூப்பர் டிப்ஸ்

குளிர்காலம் என்றாலே மனதில் ஒருவித சந்தோஷம் பிறக்கும். சில்லென்று வீசும் காற்று, மாலை நேரத்தில் சூடான டீயுடன் சுடச்சுட பஜ்ஜி, போண்டா.. அடடே அருமையான பொழுதாகவே கழியும். குளிர்காலத்தை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். என்றாலும், சருமத்திற்கு ஒரே எதிரி இந்த குளிர்காலம் தான்.

குளிர்காலத்தில் சருமம் மிக சீக்கிரமே வறண்டுப் போய்விடும். கவனிக்காவிட்டால் பலவித சருமப் பிரச்சினைகளும் வந்து ஒட்டிக் கொள்ளும். அதனால், குளிர்காலத்தில் நம் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய பேஸ் பேக்குகள் இங்கு பார்க்கலாம்..

பப்பாளி மற்றும் தேன்:

பப்பாளி பழத்தை தோல் சீவி அதன் ஒரு துண்டை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.

20 நிமிடங்களுக்கு உலரவிட்டுப் பின், கழுவி விடவும்.

இதுபோன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெற்று பொலிவுப் பெறும்.

பால் மற்றும் பாதாம்:

சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க பாலும், பாதாமும் உதவக்கூடியவை.

ஒரு சிறிய கிண்ணத்தில் பாதாம் பவுடர் அல்லது இரவில் ஊற வைத்து தோல் நீக்கி அரைத்த பாதாம் விழுதுடன் ஒரு தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி சுமார் 10 நிமிடங்களுக்கு உலரவிடவும். பின் தண்ணீரில் கழுவவும்.

இதுப்போன்று வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால், முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். முகமும் பிரகாசமாக மாறும்.

More News >>