புது கெட்டப்.. மாஸ் சிக்ஸர்.. ரசிகர்களுக்காக சிஎஸ்கே பகிர்ந்த தோனியின் அல்டிமேட் வீடியோ!

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணி வீரர்கள் நேற்றே துபாய் செல்ல, தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளது. மற்ற தொடர்களைப் போல இல்லாமல் இந்த தொடர் சென்னை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்பு பங்கேற்கும் தொடர் என்பதால். ஆனால் அவர்களின் ஆட்டத்தை நேரில் பார்க்காத குறை ரசிகர்களின் மனதில் சின்ன குறையாக இருக்கும்.

அந்தக் குறையைப் போக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அணி வீரர்களின் புகைப்படம், வீடியோக்களை வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறது. அந்த வகையில், சென்னை வீரர்கள் இன்று துபாய் கிளம்பிய நிலையில், பயிற்சி வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. வீடியோவில் வீரர்கள் பயிற்சி எடுக்கும் காட்சிகள் இருக்கின்றன. வீடியோவின் இறுதியில் தோனி இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கிறார். அப்போது ரெய்னா மாஸாக ஒரு விசில் அடித்து வரவேற்கிறார்.

மேலும் தாடி, மீசை என புது கெட்டப்பில் இருக்கிறார். ஆனால் சென்னை அணி நிர்வாகம் அடுத்துப் பதிவிட்டுள்ள டுவிட்டில், தோனி மீசை, தாடியை எடுத்துவிட்டு இன்னொரு கெட்டப்பில் இருக்கிறார்.

The super camp sorely missed the super fans, thanks to COVID. But we managed to end it with a loud whistle! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/z8NoMk7h6p

— Chennai Super Kings (@ChennaiIPL) August 21, 2020

More News >>