தமிழ் பட இயக்குனர் தெலுங்கு பட நடிகையை மணந்தார்...
தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது. ஷாலினி வட்ணிகட்டி இயக்குனர் ஒருவரைக் காதலிப்பதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் நடிகையை மணக்க உள்ள இயக்குனரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்நிலையில் ஷாலினி வட்ணிகட்டி இயக்குனர் மனோஜ் பீடா என்பவரை இன்று மணந்தார். இவர் வாஞ்சையர் உலகம் படத்தை இயக்கியவர். இதில் குரு சோமசுந்தரம் அனிஷா அம்புரோஸ் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வீட்டிலேயே ஷாலினி, மனோஜ் திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.