மெகா ஸ்டாருக்கு மோஷன் போஸ்டர் வெளியிட்ட 100 பிரபலங்கள் .. சும்மா ஸ்டைலா கெத்தா இருக்காரு..
மெகா ஸ்டார் சிரஞ்சீவி முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தவர் அல்ல. தமிழில் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். வடக்கு கோதாவரியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த இவர் சினிமாவில் பாப்புலர் நடிகராகி இன்று தெலுங்கில் மெகாஸ்டார் பட்டத்துடன் இருக்கிறார்.அரசியலுக்குள்ளும் தீவிரமாக நுழைந்து பின்னர் அதிலிருந்த ஒதுங்கி மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். நாளை அவருக்கு 64 வயது பிறப்பதையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு சூப்பர் மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதனை 100 பிரபலங்கள் வெளியிட்டிருக்கின்றனர். அதைக்கண்டு ரசிகர்கள் சும்மா ஸ்டைலா கெத்தா மெகாஸ்டார் என்று பாராட்டி உள்ளனர்.