3500 பேரை கொரோனாவில் இருந்து காப்பாற்றிய சென்னை மருத்துவரை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி...!
நடிகர் சூரி கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதற்கான விழிப் புணர்வு பிரசாரங்கள் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ஒரு கட்டத்துக்கு பிறகு மதுரை அருகே உள்ள சொந்த கிராமத் துக்கு சென்று குடும்பத்தினருடன் பொழுதை கழித்தார். தற்போது சூரி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு தரப்படும் மூலிகை கஷாயம் பற்றி அதில் கூறியிருக்கிறார். சூரி கூறியிருப்பதாவது:அனைவருக்கும் வணக்கம்.எல்லாரையும் ஆறு மாசமா முடக்கி போட்டுறுச்சி இந்த பாழாப்போன கொரோனா. ரத்த சொந்தம், நெருங்கிய நண்பர்கள் யாராய் இருந்தாலும் சமூக இடைவெளி விட்டே பேசவேண்டி இருக்கு. உலகத்துக்கே இதுதான் நிலமை.இந்த சூழலில், சென்னை சாலிகிராமம் ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் இத்த மருத்துவர் வீரபாபு, அவரது மூலிகை கசாயம் மூலமா கொரோனாவால் பாதிக் கப்பட்ட 3500 க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருக்கி றாம். குறிப்பா இதுல ஒரு உயிர் இழப்பு கூட ஏற்படலயாம்.எல்லாரும், எட்ட நின்னு பாக்குறப்போ, நீங்க மட்டும் கிட்ட நின்னு தொட்டு பரிசோதிக்கும்போது கண்ணுக்கு தெரியற சாமியாவே உங்கள கும்புடதோணுது. அப்படீன்னு வைத்தியம்பாத்துட்டு வர்ற அத்தனை பேரும் சொல்லும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார்.இத்தனைபேரையும் காப்பாத்துன, காப்பாத்திக்கிட்டிருக்கற உங்களையும், உங்ககூட வேலை செய்யறவங்களையும், அந்த ஆத்தா மதுரை மீனாட்சிஎப்பவும் காப்பாத்துவா.முக்கியமா நீங்க கொடுக்கிற கசாயம் , கறிக்குழம்பு மாதுரி,சும்மா ஜம்முன்னு இருக்காம். வாழ்த்துகள் வீரபாபு சார்