இந்த பலி ஆடுகளைக் கண்டால் தகவல் தரவும் - முகநூலிலும் தலைவிரித்தாடும் ஆணவக்கொலைக் கொடூரங்கள்...!

சில வருடங்களுக்கு முன்னர் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் துள்ளத்துடிக்க கொலை செய்யப்பட்ட சங்கரின் ஆணவப்படுகொலைகள் நம் கண்ணிலிருந்து அகல்வதற்கு முன், வருடத்தில் இரு இலக்கத்தில் ஆணவ கொலைகளின் எண்ணிக்கை நிகழ்ந்து வருகின்றன. தற்கொலை எனும் பெயரில் பல ஆணவக் கொலைகள் மறைக்கப்படுகின்றன.

ஆணவக் கொலைகளை எதிர்த்து தமிழகம் மட்டும் அல்லாது இந்திய தேசம் முழுவதும் சமூக நீதி ஆர்வலர்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சில முகப்புத்தக பதிவுகள் பொது சமூகத்தின் மீது அவநம்பிக்கையை ஊட்டுகின்றன.

அந்த வகையில் சாகுல் ஹமீது எனும் ஒரு இளைஞர் கலப்பு திருமணம் செய்த ஜோடிகள் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது

சென்னையை சேர்ந்த பாலாஜியையும், மதுரையை சேர்ந்த ரிஹானாவையும் பலி ஆடுகள் என சித்தரித்து அவர் இட்ட முகப்புத்தக பதிவிற்கு ஆதரவுகள் கிடைப்பது தான் இந்த தமிழ் சமூகத்தின் சாபம்.

இதே சாகுல் ஹமீது உடுமலை சங்கர் கொலை வழக்கை மையமாக வைத்து கெளசல்யா அவர்களின் மீது விமர்சனங்கள் பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது போல பதிவிடும் நபர்களை கண்காணிக்க அல்லது கட்டுப்படுத்த இந்த இணைய உலகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்

ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம்.

அந்த தீர்ப்பையும் சென்னை உயர்நீதிமன்றம் குறைத்தது சோகம். இப்பொழுது தமிழக அரசு நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தின் வாசல்களை தட்டுகின்றது.

என்று தணியும் இந்த சாதிவெறியும், மதவெறியும்...

More News >>