குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் மோதகம்

குழந்தைகளுக்கு மோதகம் என்றாலே ரொம்பப் பிடிக்கும். அதுவும் சாக்லேட்டில் மோதகம் என்றால் சொல்லவா வேண்டும். செய்து கொடுத்துப் பாருங்கள் தட்டில் எப்படி காணாமல் போகும் என்று..

தேவையான பொருட்கள்:

டார்க் சாக்லேட் - ஒன்றரை கப்

தேங்காய்த் துருவல் - 3 மேசைக் கரண்டி

நறுக்கிய பாதாம் - ஒரு மேசைக் கரண்டி

நறுக்கிய முந்திரி - ஒரு மேசைக் கரண்டி

கண்டென்ஸ்டு மில்க் - ஒரு மேசைக் கரண்டி

செய்முறை:

முதலில் டபுள் பாய்லர் முறையில் டார்க் சாக்லெட்டை முழுமையாக கரைக்கவும். அதாவது, அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதன் மீது மற்றொரு பாத்திரம் வைத்து ஆவியில் சாக்லெட்டை கரைக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் துருவியத் தேங்காய், பாதாம், முந்திரி, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

மோதகம் அச்சுயில் கரைத்த சாக்லெட்டை பாதி அளவு ஊற்றவும். பின், தேங்காய் கலவையை அதில் வைத்து மீண்டும் சாக்லேட்டை ஊற்றி மூடவும்.

இதனை ப்ரிட்ஜ்ஜில் 10 முதல் 20 நிமிடங்கள் வைரை வைத்து, சாக்லேட் கெட்டி ஆனதும் எடுக்கவும்.

குழந்தைகள் விரும்பும் சாக்லேட் மோதகம் ரெடி!

More News >>