தங்கை வேடத்தில் நடித்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் செய்த கைமாறு..
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள். ஆனால் எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தாலும் சிவகார்த்திகேயனின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நடித்தார்.
Happy to release the Title motion poster of @aishu_dil s 25th film Titled #Boomika A @karthiksubbaraj presentation and directed by @RathindranR https://t.co/GA2y0pCQ8J Wishing the entire team the very best 😊👍@StonebenchFilms @kaarthekeyens
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 22, 2020
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது 25வது படமாக பூமிகா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்குகிறார். கார்த்திக் சுப்பராஜ் பேஷன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக் கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளி யிட்டு வாழ்த்து கூறி உள்ளார்.