படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அமிதாப் இன்று படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். அங்கு, அமிதாப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அமிதாப் பச்சனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அமிதாப்பிற்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் ஜெய்ப்பூருக்கு விரைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அமிதாப் விரைவில் குணைமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>