முதல்வரின் மகள் உதவியாளர் முதல் உறவினர்கள் வரை.. 5000 முறை வன்கொடுமை செய்யப்பட்ட பெண்!
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள செட்டி பள்ளியை சேர்ந்த பெயர் வெளியிடாத 25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகார் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``கடந்த 2009-ல் என் வீட்டுக்கு அருகில் வசித்த ரமேஷ் என்பவருடன் எனக்கு திருமணம் ஆனது. சில மாதங்களில் நான் கணவர் வீட்டினரால் துன்புறுத்தலுக்கு ஆளானேன். என் மாமனார், மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி என அவர்களின் வீட்டினர் சுமார் 9 மாதங்கள் என்னை கொடுமை செய்தனர். இதில் என் கணவர் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பலமுறை என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர். இதனால் என் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன். பின்னர் கல்லூரியில் சேர்ந்து எனது படிப்பைத் தொடர்ந்தேன்.
கல்லூரி காலத்தில் ஏற்பட்ட சிலரின் அறிமுகம் என் வாழ்க்கையை முற்றிலுமாக சீரழித்து விட்டது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுமன், ஆஞ்சநேயலு, பாலு, ஜிம் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ், சென்னையை சேர்ந்த சதீஷ், வழக்கறிஞர்களான வெங்கடேஷ், முகேஷ், பெங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டானர். இதேபோல், தெலுங்கானா மாநில முதல்வர் மகள் கவிதாவின் முன்னாள் உதவியாளர் சந்தோசஷ் ராவ்வும் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார்.
இவர்கள் என்னை ஒரு அறையில் அடைத்து கூட்டு வன்புணர்வு செய்தனர். மேலும் என்னை கத்தியை காட்டி மிரட்டியும், பெட்ரோல், ஆசிட் உள்ளிட்டவைகளை ஊற்றி கொன்றுவிடுவோம் என்று மிரட்டி என்னை நிர்வாணமாக புகைப்படங்கள், வீடியோவை எடுத்து, அதை அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் வரவழைத்து என்னுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தினர். இப்படி, கடந்த பத்தாண்டுகளில் 143 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 5 ஆயிரம் முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுளேன். மேலும் எனது நிர்வாண வீடியோக்கள் சிலவற்றை ஆன்லைனிலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் என்னை அடித்து மிரட்டி என்னுடன் உறவு கொண்டவர்களுக்கு போன் செய்து பணம் கேட்க வைத்தனர். பணம் வந்ததும் அந்த பணத்தை அவர்களே எடுத்துக் கொண்டனர். இதுபற்றி புகார் செய்வேன் என்று அவர்களிடம் கூறினேன். `நீ புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது" எனக் கூறி எனது சான்றிதழ்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டனர். என் சூழலை அறிந்து ஹைதராபாத் காட்பவர் பவுண்டேஷன் அடைக்கலம் கொடுத்து நான் புகார் கொடுக்க உதவினர். அந்தக் கும்பல். என்னை எப்படியும் கொலை செய்து விடுவார்கள். இறந்த பின் என் உடலை காட்பவர் பவுண்டேஷன் இடம் ஒப்படைத்து விடுங்கள்" என ப் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.