யம்ம்மீமீ.. ஹாட் சாக்லேட் ட்ரிங்க் ரெசிபி

திடீரென வீட்டிற்கு விருந்தாளி வந்துட்டாங்களா.. சட்டுன்னு செய்துக் கொடுங்க ஹாட் சாக்லேட் ட்ரிங்க்..

தேவையான பொருட்கள்:

முழு கொழுப்புள்ள பால் - 2 கப்

ப்ரெஷ் க்ரீம் - கால் கப்

பட்டைத் தூள் - அரை தேக்கரண்டி

டார்க் சாக்லேட் - 130 கிராம்

சோளப் பொடி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்கவிடவும். அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.

பின்னர், ப்ரெஷ் க்ரீம், பட்டைத் தூள், டார்க் சாக்லேட், சோளப் பொடி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

டார்க் சாக்லேட் நன்றாக கரைந்ததும், தம்ளர்கள் சுடச்சுட ஊற்றவும்.

ஹாட் சாக்லேட் மீது துருவிய டார்க் சாக்லேட், பாதாம், முந்திரி தூவி பரிமாறவும்.குளிர்காலத்திற்கு ஏற்ற சுடச்சுட ஹாட் சாக்லேட் வீட்டிலேயே தயார்!

More News >>