சூர்யா எடுத்த முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கான வழி.. திரை அரங்கு உரிமையாளர் அதிருப்தி..

கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.தயாரிப்பாளர்களும் கோடிகளில் பணத்தை முதலீடு செய்து படத்தை எடுத்து முடித்தும் ரிலீஸ் செய்ய முடியாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்த ஆண்டில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் சிலர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர்.

ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், கீர்த்தி நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெயில் ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகின. சூர்யாவின் சூரரைப் போற்று படம் தியேட்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது என்று சூர்யாவே அறிவித்திருந்தார். ஆனால் தியேட்டர் திறப்பு இப்போதைக்கு இருக்காது என்று அமைச்சர் அறிவித்தார். மேலும் காத்திருக்க முடியாத சூழலில் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய முடிவுசெய்து அறிவித்தார். அதன்படி வரும் அக்டோபர் 30ம் தேதி படத்தை அமேசான் பிரமையில் வெளியாக உள்ளது. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.

இது தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. பெரிய ஹீரோ படம் ஒடிடியில் ரிலீஸ் ஆகாத நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று படம் வெளியாவது ரசிகர்களை ஒடிடி தளம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது குறித்து,திரைப்பட விநியோகஸ்தர் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் படத் தயாரிப்பாளர்கள் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார். கடும் நெருக்கடி சூழலில் சினிமா துறை சந்தித்து வருகிறது. இந்நிலையில் திரையரங்கு உரிமைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சூர்யா எடுத் திக்கும் இந்த முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கான வழியாக இருக்கிறது. சூர்யா லாபத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார். அவர் வளர்ச்சிக்கு தியேட்டர்கள் ஏணியாக இருந்தது. அதை அவர் கீழே தள்ளிவிட்டுவிட்டார். சூர்யாவின் முடிவு தவறானது என்றார்.

More News >>