சுஷாந்த் தற்கொலையில் வாரிசு நடிகை பெயரை வெளியிட்டு ஹீரோயின் பரபரப்பு.. தன்னை காதலித்து ஏமாற்றிய நடிகர் மீதும் புகார்..
வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர். சுஷாந்த்தை காதலித்த நடிக ரியா சக்ரபோர்த்தியையும் கங்கனா குற்றம் சாடினார்.
வாரிசு நடிகர், நடிகைகள் பெயர் எதையும் குறிப்பிடாமல் பொதுவாக கங்கனா கருத்து தெரிவித்த நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்த அழைத் தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் சுஷாந்த்தை காதலித்த வாரிசு நடிகை பற்றிய தகவலை கங்கனா வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அத்துடன் தன்னை காதலித்து ஏமாற்றிய வாரிசு நடிகர் பற்றியும் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:சுஷாந்த் சிங், சாரா அலிகான் காதல் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வந்துள்ளது. (சாரா அலிகான் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் ஆவார்). ஸ்டார்களின் மகள்கள் நடிகர்களைக் காதலித்து பிறகு கைவிட்டுச் செல்கிறார்கள்.
சுஷாந்த் சிங்கை சாரா அலிகான் உண்மையாக காதலித்து இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு பின்னணியிலிருந்து யாரோ தந்த அழுத்தம் காரணமாக சுஷாந்தை விட்டு விலகி இருக்கலாம்.நடிகர் ஹிருத்திக் ரோஷனை நான் உண்மையாகக் காதலித்தேன். ஆனால் திடீரென்று என்னை எதிரிபோல மாற்றி விட்டார். அவர் ஏன் அப்படி மாறினார் என்பது மர்மமாக உள்ளது.இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார். ஹிருத்திக் ரோஷனும் ஒரு வாரிசு நடிகர் தான். பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் ராகேஷ் ரோஷனின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.