விஜய், மகேஷ்பாபு வாரிசுகள் ஹீரோவாக நடிக்க தயார் நிலையில் காத்திருக்கின்றனர்..
பாலிவுட் போலவே கோலிவுட், டோலிவுட்டிலும் நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையுலகில் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே விக்ரம் பிரபு, துருவ் விக்ரம், சாந்தனு, பிரித்வி எனப் பல நடிகர்களும், கீர்த்தி சுரேஷ், கார்த்திகா, துளசி எனப் பல நடிகைகளும் வாரிசு நட்சத்திரங்களாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டுத் திரும்பி இருக்கிறார். அவர் ஹீரோவாக அறிமுகமாகவிருப்பதாக தகவல் வெளியானது.
நடிகர் விஜய் சேதுபதி தான் தயாரிக்கும் படத்தில் ஜேசன் சஞ்சையை ஹீரோவாக அறிமுகப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட தயாரிப்பாளரும் ஜேசனை ஹீரோவாக அறிமுகப்படுத்த விரும்புவதாக விஜய்யிடம் கூறி உள்ளாராம். ஆனால் அதற்கு விஜய் இன்னும் கிரீன் சிக்னல் காட்டவில்லை. இந்நிலையில் டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபுவுன் மகன் கவுதம் வளர்ந்து ஹீரோவாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு ஆளாகி நிற்கிறார்.
மகேஷ்பாபுவும், விஜய்யும் நல்ல நண்பர்கள். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒரு சில ஹிட் படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்திருக்கிறார். தற்போது இவர்களின் வாரிசுகள் திரையுலக களத்தில் இறங்கத் தாயாராக இருக்கின்றனர். இந்த 2 வாரிசுகளில் முதலில் திரையுலகில் களம் இறங்கப் போவது யார் என்பதுதான் தற்போதுள்ள சஸ்பென்ஸ்.பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் மகேஷ்பாபு மகன் கவுதம் பூஜையில் கலந்துகொண்டார். அந்த படத்தை மகேஷ்பாவுவின் மனைவி நர்மதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.