அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் நூடுல்ஸ் சூப்!

அசைவப் பிரியர்கள் விரும்பும் சிக்கன் நூடுல்ஸ் சூப் எப்படி செய்வதென்று இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்

வேக வைத்த நூடுல் - ஒரு கப்

பூண்டு - 5

வெங்காயம் - 2

உருளைக்கிழங்கு - 2

கேரட் - 2

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின், நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் சேர்க்கவும். தொடர்ந்து சிக்கன் துண்டுகள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி மூடி 4 அல்லது 5 விசில்விட்டு இறக்கவும். சிக்கன் சூப் தயார்.

சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வேக வைத்த நூடுல்ஸை அதுனுடன் சேர்த்து மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

சுடச்சுட சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி!

More News >>