அரசே விலகி விடு, கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை..
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தினம் தினம் அரசின் அலட்சியம், சமூக அவலம் குறித்து டிவிட்டரில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். கொரோனா ஊரடங்கில் மக்கள் படும் அவதி வேலை இழப்பு போன்றவற்றையும் வேலை வாய்ப்பு பறிபோய் நிற்கதியாய் நிற்பவர்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார். பொருளாதார இழப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய முக்கியத்துவம் பற்றி தமிழக மற்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டது போல் தெரியவில்லை. இன்று நடக்கும் கொள்ளைச் சம்பவங்கள் பொருளாதார அவலத்தை எதிரொலிக்கிறது என கமல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் மெசேஜில்,சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும் வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு, தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவை அனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத் துவங்கி விட்டது. அரசே விழித்தெழு அல்லேல் விலகிவிடு எனத் தெரிவித்திருக்கிறார்.அரசியலில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வரும் கமல் தனது அடுத்தகட்ட படப்பிடிப்பு பற்றியும் ஆலோசித்து வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதலுடன் படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கிய நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்குதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பிக்பாஸ் அடுத்த ஷோ பற்றிய பணிகள். தான் நடிக்கும் மற்றொரு படமான தலைவன் இருக்கிறான் ஆகியவற்றின் பணிகளையும் திட்டமிட்டு வருகிறார் கமல்.