கொரோனாவிலிருந்து குணம் ஆன விஷால் படப்பிடிப்புக்கு தயார்.. ஷூட்டிங்கிற்கு அனுமதி தந்த மத்திய அரசுக்கு நன்றி சொன்னார்..
கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகம் தான். படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையுலகத்தினர் விடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய அரசு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று நேற்று அனுமதி அளித்துள்ளது. அதற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்து தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவர் மெசேஜில்,படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி . இது நம்பிக்கை அளித்துள்ளது. எல்லா படப்பிடிப்பு குழுவினரும் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல் தமிழக அரசிடமிருந்து இதற்கான பாதுகாப்புக்குரிய விதிகளுடன் கூடிய அனுமதியையும் எதிர்பார்க்கிறோம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.விஷால் சக்கரா மற்றும் துப்பறிவாளன் 2ம் பாகம் ஆகிய படங்களில் நடிக்கிறார். சக்கரா படத்தின் டீஸர், டிரைலர் வெளியிடப்பட்டது.
துப்பறிவாளன் 2 படத்தைப் பொறுத்தவரை முதலில் மிஷ்கின் இப்படத்தை இயக்கினர்.பட்ஜெட் விவகாரத்தில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் மோதல் ஏற்பட்டதால் படத்திலிருந்து மிஷ்கின் விலகினார். இதையடுத்து இயக்குனர் பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பணிகள் தடைப்பட்டிருக்கின்றன, மேலும் கொரோனா தொற்றாலும் நடிகர் விஷால் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்தார். அதில் பூரண குணம் அடைந்தார். போதிய தனிமை ஓய்வும் எடுத்துவிட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்கத் தயாராகி வருகிறார் விஷால்.