தமிழகத்தில் கொரோனா பலி 6614 ஆக அதிகரிப்பு.. நோய் பரவல் கட்டுப்படவில்லை..

தமிழகத்தில் இது வரை 3.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 6,614 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலத்தில் இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று(ஆக.24) 5967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 26 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 85,352 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6139 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 25,456 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 97 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6,614 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 53,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1277 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 26.677 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 306 பேருக்கும், காஞ்சிபுரம் 226, மதுரை 72, திருவள்ளூர் 354பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டில் இது வரை 23,806 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15,742 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13,508 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 22,759 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், கோவை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

More News >>