தொழில் தொடங்கும் நடிகைகளுக்கு மத்தியில் சமந்தாவின் புதிய திட்டம்..

நடிகைகளில் தமன்னா தங்க நகைகள் டிசைன் பிஸ்னஸ், ரகு பிரீத் சிங் உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்), டாப்ஸி திருமண மேட்சிங் சென்ட்டர், பிரணிதா பாட்டில் வாட்டர் பிஸ்னஸ் இன்னும் சில நடிகைகள் காஸ்மெட்டிக் மற்றும் காஸ்டியூம் பிஸ்னஸ் எனப் பல வித பிஸ்னஸ்களில் பணத்தை முதலீடு செய்து அதிலிருந்து பெரிய வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களில் சற்று வித்தியாசமாகத் தனது கவனத்தை செலுத்துகிறார் சமந்தா.

ஐதராபாத்தில் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்து வரும் சமந்தா சினிமா தவிர வெப் சீரிஸ்களில் நடிக்கிறார். கொரோனா காலத்தில் நேரத்தை வீணாக்காமல் யோகா பயிற்சி, சமையல் கலை, கார்டனிங் ஸ்விம்மிங் எனப் பயனுள்ள வகையில் கலைகளை கற்றும் வேலைகள் பார்த்தும் பிஸியாக இருந்தார். தற்போது சமூக அக்கறையுடன் அவர் குழந்தைகள் பெற்றோர்களின் கல்விக்காக அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறார்.ஏகம் ஆரம்பக்கால கல்வி மையம் என்ற பள்ளிக்குச் செல்லும் முன்பள்ளியைத் கற்கும் பயிற்சி வகுப்பு தொடங்கினார். தனது தோழி ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டி மற்றும் கல்வியாளர் முக்தா குரானா ஆகியோருடன் இதற்காகக் கைகோர்த்தார்.

"இயர்லி ஏகம் குழு. எங்கள் புதிய முயற்சி குறிப்பாகப் பெற்றோர்களை மேம்படுத்துவதற்கும் இந்த சோதனை காலங்களில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வரும்!" என்றார்.ப்ரி எஜுகேஷன் (முன்-ஆரம்பக் கல்வி) கற்பித்தல் மட்டுமல்ல; இது குழந்தை எதிர்கால வளர்ச்சி நோக்கி இளம் மனதைப் பயிற்றுவிப்பதாகும். சமந்தாவின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சமந்தா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

More News >>