உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே.. கமல் பதிலடி
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்ததற்கான மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார். அதன்பிறகு, கட்சி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிக்காக பிரத்பேய இணையத்தளத்தையும் தொடங்கினார். கட்சியில், பலர் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக இணைந்துவிட்டதற்கான மின்னஞ்சல் எனக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ஆட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கிடைக்கும் மின்னஞ்சல் முகவரியை எல்லாம் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதா என கமல்ஹாசனை கேள்வி எழுப்பினார். ஆனால், இதற்கு மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழிசையின் குற்றச்சாட்டிற்கு கமல் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், “உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே.. நீங்கள் காட்டியது போல நாங்களும் “படம்” காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடதல்லவா..?. ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை பதிவு செய்தமைக்கு நன்றி” என்று கமல் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com