உசேன் போல்ட்டுக்கு கொரோனா கிறிஸ் கெய்லுக்கு சிக்கல்
பிரபல தடகள வீரரான உசைன் போல்ட் சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை ஜமைக்காவில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
தனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை என்றாலும் கொரோனா நிபந்தனைகளின்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களும் தனிமையில் செல்ல வேண்டும் என்றும் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளார். இதனால் உசைன் போல்ட்டின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல் உள்படப் பல முக்கிய பிரமுகர்களும் தனிமையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தான் இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தி விட்டதாகவும் இரண்டு பரிசோதனை முடிவுமே நெகட்டிவ் தான் என்றும் கெய்ல் கூறியுள்ளார்.