நோக்கியா 5.3 மொபைல் போன் அறிமுகம்: செப்டம்பர் 1 முதல் விற்பனை
தனி கூகுள் அசிஸ்டெண்ட்பொத்தானுடன் புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு 8 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா முன்புறம் உள்ளது. விரல்ரேகை உணரியும் (fingerprint sensor) இதில் உள்ளது.
சிறப்பம்சங்கள்
திரை: 6.55 அங்குலம்பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 665முன்பக்க காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்பக்க காமிரா: 13 எம்பி; 5 எம்பி; 2 எம்பி; 2 எம்பி ஆற்றல்இயக்க வேகம்: 3 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)மின்தேக்க திறன்: 4000 mAhஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
4 ஜிபி + 64 ஜிபி கொண்ட நோக்கியா போனுக்கு ரூ.13,999/- விலையும், 6 ஜிபி + 64 ஜிபி போனுக்கு ரூ.15,499/- விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. ஆனால் நோக்கியா இணையதளத்தில் இப்போதே பதிவு செய்து கொள்ளலாம்.
சலுகைகள்: நோக்கியா 5.3 மொபைல் போன் வாங்கும் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ.4,000/- மதிப்புள்ள சலுகைகள் உள்ளன.